2

இந்நூல் உருவான விதம்


வெண்பா வடிவில் இயேசுவின் வாழ்க்கையையும் ஆதியாகமத்தையும் எழுதி முடித்தப் பின்னர், ஆதியாகமம் வடிவம் திருத்துகையில் அடுத்து எழுத வேண்டிய நிகழ்வைக் குறித்து மனம் வாஞ்சித்துக் கொண்டிருந்த போது ஆவியானவர் தெளிவாக இரு பெரும் இறைவாக்கரை குறித்து எழுதப் பணிப்பதை உணர்ந்தேன். ஆதிநூல் வெண்பா வடிவத் திருத்தத்தின் போதே எலியா படலம் பாதிக்கு மேல் எழுதி முடித்தாகி விட்டது. தேவ ஆவியானவரின் அபிஷேகம் நிறைந்த இரு இறைவாக்கினர் எலியா, எலிசா வாழ்க்கை எழுதும் போது அனைத்து பாக்களும் நேரிசை வெண்பாக்களாக அமையப் பெற அபிஷேகம் பெற்றேன்.

அப்படியே இருவரின் வாழ்க்கை நிகழ்வுகள் நேரிசை வெண்பாக்களில் தங்கள் கரங்களில் இதோ.

இந்நூல் வடிவத் திருத்தம் செய்ய அண்ணன் லூக்கா அருள்தாஸ் உதவினார். என் தாயார் திருமதி சிந்தாமணி சந்திப் பிழைகள் மற்றும் இலக்கணப் பிழைகளை திருத்தினார். இந்நூலில் உள்ள அட்டைப் படத்தை எனது மனைவியின் தாயார் திருமதி சுந்தரி கண்ணன் வரைந்து கொடுத்தார்.

என் மனைவி மற்றும் என் மகள் இந்த முயற்சியில் பேராதரவாக இருந்தனர். சகோதரி இராணி இந்த முயற்சிக்காக மடிக்கணினி தந்து உதவினார். மேலும் பலர் இம்முயற்சியில் கிரியா ஊக்கிகளாக இருந்தனர். உதவிய யாவருக்கும் கர்த்தர் அவரவர் செய்த கிரியைகளுக்கு ஏற்ப பலன் கொடுப்பார் என்ற வாக்குத்தத்தம் போலே ஆசீர்வாதங்களைப் பொழிவாராக.

முழு வேதாகமத்தையும் கர்த்தரின் அருளால் வெண்பா வடிவில் தொடர்ந்து எழுதி முடிக்க கர்த்தர் தாமே அருள்செய்வாராக.

துதி கணம் மகிமை வல்லமை மாட்சிமை எல்லாம் அகிலம் படைத்த யேகோவா நாமமுள்ள தேவனுக்கே அடைவதாக. கிறிஸ்து இயேசுவின் மீள்வருகையை எதிர் நோக்கும்


ஆபிரகாம் கிரி 

Comments

Popular posts from this blog